தமிழ்நாடு

யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது – 25ஆம் தேதிவரை சிறையிலடைக்க உத்தரவு

Veeramani

தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் யூடியூபர் சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரியில் உள்ள மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதாக நாம் தமிழர் கட்சி நேற்று தக்கலையில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சாட்டை துரைமுருகன் தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தக்கலை காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், நாங்குனேரியில் துரைமுருகனை காவல்துறையினர் கைதுசெய்து சிறைக்கு கொண்டுசென்றனர்.

முன்னதாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் தலைவர்கள் மற்றும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. சாட்டை துரைமுருகனை 25ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.