தமிழ்நாடு

வாணியம்பாடியில் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயம்

webteam

வாணியம்பாடியில் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயமான நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணியை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது நூருதீன் (30). இவர் இன்று பிற்பகல் ராமாயணதோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச்சென்ற போது எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருத்தவர்கள் அவரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் முகமது நூருதீன் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வாணியம்பாடி வட்டாச்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்க்கொண்டனர். அதனையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக முகமது நூருதீனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கிடைக்காததால், போதிய வெளிச்சம் இல்லாமல் தேடும் பணியில் தோய்வு ஏற்பட்ட நிலையில், தேடும் பணியை தற்காலிகமாக தீயணைப்பு துறையினர் ஒத்திவைத்தனர்.

மேலும் இந்நிகழ்வு குறித்து நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.