தமிழ்நாடு

செல்போன் பறிக்கும் கும்பல் தாக்கி வடமாநில இளைஞர் கொடூர விபத்து

செல்போன் பறிக்கும் கும்பல் தாக்கி வடமாநில இளைஞர் கொடூர விபத்து

Rasus

சென்னை‌ திருவொற்றியூர் அருகே ரயில் படிக்கட்டில் நின்றபடி சென்றபோது சிறுவர்கள் செல்போனைப் பறிக்க தாக்கியதால் கிழே விழுந்த பயணியின் கால் துண்டானது.

‌ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ராமர் சிவா என்பவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல நெல்லூர் பயணிகள் ரயிலில் ஏறினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகேயுள்ள அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சிக்னலுக்காக மெதுவாக சென்றுள்ளது.

அப்போது ராமர் சிவா படிக்கட்டின் அருகே நின்று செல்போனில் பேசியபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தண்டவாளம் அருகே கையில் பெரிய கம்புடன் நின்றுகொண்டிருந்த மூன்று சிறுவர்கள் திடீரென ராமர் சிவாவின் செல்போனை பறிக்கும் நோக்கில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கையில் பலத்த காயமடைந்த ராமர் சிவா வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தார். அப்போது தண்டவாளத்தில் அவரது கால் மாட்டிக்கொண்டது. ரயில் அவரின் கால்மேல் ஏறிச் சென்றதால், ராமர் சிவாவின் வலது கால் துண்டானது.

இதனால் வலியால் துடித்த அவரது அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியினர் அளித்த தகவல் அடிப்படையில் அங்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர் ராமர் சிவாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சிறுவர்கள் மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.