பெரம்பலூரில் காணாமல் போன 40 அடி அகலமுள்ள நீர்வரத்து வாய்க்காலை கண்டுபிடித்து தரவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பெரம்பலூரை சேர்ந்த இளைஞர்கள் அமைப்பு, உலகத்தமிழர் பேரவை மற்றும் நீர்வழி உறவு அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் “பெரம்பலூர் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் 1911-ஆம் ஆண்டு 40 அடி அகலத்தில் ஜார்ஜ் வாய்க்கால் வெட்டப்பட்டது. தற்போது அந்த வாய்க்கால் காணவில்லை. அதனை கண்டுபிடித்து தரவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், “தனியார் ரியல் எஸ்டேட் துறையினர் ஆக்கிரமிப்பில் வாய்க்கால் காணாமல் போயுள்ளது. அதனை கண்டுபிடித்து தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.