மதத்துக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பியதாகவும், அதைத் தொடர்ந்தே கோவையில் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த பரூக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கோவையில் இரும்பு வியாபாரம் செய்து வந்தவர் பரூக். மதத்துக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், உறவினர்களும், நண்பர்களும் தன்னை வெறுப்பதாக, பரூக் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். பரூக் கொலைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொலை தொடர்பாக அஷ்வந்த் என்பவர், 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.