சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷவாயு தாக்கி மயக்கமடைந்த தம்பியை மீட்கச்சென்றபோது அண்ணன் உயிரிழந்துள்ளார். மயக்கமடைந்த தம்பி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகுந்த உபகரணம் இல்லாமல் கழிவுநீர் தொட்டியில் இறங்கியதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் பாதிக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்திய நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.