நெல்லையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திருநெல்வேலி பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினரும் கொக்கிரக்குளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதேப்போல் குறுந்துடையார்புரம் பகுதியிலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதே போன்று மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சமூக வலைத்தள நண்பர்கள் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.