சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
22 வயது இளைஞர் குலாப் சுமார் 9 மணி அளவில் வீடு அருகே அமைந்துள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில், திடீரென நான்காவது மாடியில் இருந்த பால்கனி மேற்கூரை தலை மீது விழுந்துள்ளது.
ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.