திருப்பூர் ரயில் தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ரயில் தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் திருப்பூர் அணைப்பாளையம்புதூர் சாமக்காட்டு தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்பதும் இவர் ராயபுரம் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்ததும் தெரியவந்தது.
நேற்று காலை பணிக்கு சென்றவர் மாலை 6 மணியாகியும் வீடு திரும்பாத நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இது தற்கொலையா? கொலையா? அல்லது விபத்தா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.