கிழக்கு தாம்பரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்தவர் முருகன்(30). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டவர். இதைத்தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் வரை ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் விரக்தியில் இருந்த முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)