கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை முத்தமிட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குனியமுத்தூர் - பாலக்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் இளம்பெண் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, கோவைப்புதூரை சேர்ந்த முகமது ஷெரிஃப் என்பவரின் இருசக்கர வாகனத்தில் லேசாக மோதியதாக தெரிகிறது. உடனடியாக மன்னிப்பு கோரிய அந்த பெண், தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். ஆனால் அவரை பின் தொடர்ந்து சென்ற முகமது ஷெரிஃப், உக்கடம் அருகே வழிமறித்து அப்பெண்ணின் பெயர் விவரங்களை கேட்டுள்ளார்.
அப்போது திடீரென அப்பெண்ணின் கை மற்றும் கழுத்தில் அந்த இளைஞர் முத்தமிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரிடமிருந்து தப்பிய அப்பெண், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது ஷெரிஃப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.