விழுப்புரத்தில் பட்டாக்கத்தி உடன் புத்தாண்டு கொண்டாடிய இளைஞர் கைது pt
தமிழ்நாடு

பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டு வைத்து புத்தாண்டு கொண்டாட்டம்.. 2 இளைஞர்கள் கைது!

நாடு முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் பாட்டாக்கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் புத்தாண்டு கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

PT WEB

விழுப்புரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாகத்தியுடன் வீடியோ எடுத்தும், நாட்டு வெடி குண்டை சாலையில் வீசி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த இரு இளைஞரை விழுப்புரம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பட்டாக்கத்தியுடன் வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட  ஜானகிபுரத்தை சார்ந்த ரஞ்சித் (23) என்ற இளைஞரை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே போன்று திருவக்கரை பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் என்ற இளைஞர் பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி பொருளை கொண்டு நாட்டு வெடி தயாரித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் சாலையில் வீசி அதை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இதனால் நந்தகோபாலை வானூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

நீதிமன்றம்

மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிடுபவர்கள் கண்காணித்து கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.