திருவள்ளூர்  pt
தமிழ்நாடு

பெரியபாளையம் | வடிவேல் பட பாணியில் போதையில் ரகளை செய்த நபர்.. அலேக்காக தூக்கிய காவல்துறை!

கையில் இரும்பு ராடை வைத்து கொண்டு சாலையில் சென்ற வாகனங்களை எல்லாம் வழி மறித்து வடிவேல் பட பாணியில் அலப்பறை செய்யும் இவர் தான் ராளப்பாடி ராஜா... யார் இவர்? நடந்தது என்ன?

PT WEB

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ராளப்பாடி பகுதிக்கு மதுபோதையில் கையில் கட்டையுடன் சென்ற ராஜா என்ற இளைஞர் சாலையில் வந்த லாரி கார் என அனைத்தையும் மடக்கி பிடித்து வடிவேலு படப்பாணியில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்..

போதை தலைகேறியதும் துருப்பிடித்த கத்தியை கொண்டு வந்து மாஸ் காட்டுவதாக நினைத்து சாலையோரம் இருந்த செடிகளை வெட்டி வீசி அலப்பறை செய்துள்ளார்..பொது மக்களை அறுச்சுறுத்தும் விதமாக நடந்து சென்றுள்ளார்..இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அடுத்த நொடி பெரியபாளையம் போலீசார் கையில் பைப்புடன் ராளப்பாடி ராஜாவை வளைத்து வளைத்து தேடியுள்ளனர்..

ஆனால் ராளப்பாடி ராஜா அங்கிருந்த புதருக்குள் போய் ஒளிந்து கொண்டு போலீசாருக்கு போக்கு காட்டியுள்ளார்..

தப்பிச்சென்ற ராஜாவை தட்டித்துக்கிய காவல்துறை..

உடனடியாக அந்த ஊர் இளைஞர்கள் உதவியுடன் புதருக்குள் புகுந்து கொண்ட ராளப்பாடி ராஜாவிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அருகில் நெருங்கி சென்றதும் திடீரென அங்கிருந்த காம்பவுண்டில் ஜம்ப் அடித்து தப்பிச் சென்றார்..

பலமணி நேரமாக அவரை பிடிக்க சுற்றி சுற்றி வந்து ஒரு வழியாக மடக்கி பிடித்து அலேக்காக தூக்கி வந்தனர் காவல்துறையினர். பின்னர் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.