தமிழ்நாடு

"அரியர் மாணவர்களின் அரசனே"-முதல்வரை புகழ்ந்து பேனர்..!

"அரியர் மாணவர்களின் அரசனே"-முதல்வரை புகழ்ந்து பேனர்..!

jagadeesh

ஈரோடு மாவட்டத்தில் "அரியர் மாணவர்களின் அரசனே" என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, அரியர் தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருப்பவர்களுக்கு தேர்வெழுத விலக்களிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, பொறியியல், கலை உள்ளிட்ட படிப்புகளில் அரியர் தேர்வெழுத இருந்த மாணவர்கள் முதல்வரைப் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தில் "அரியர் மாணவர்களின் அரசனே" என முதல்வரைக் குறிப்பிட்டு, திருக்குறளை மேற்கோள் காட்டி நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.