கோவையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை தெற்கு உக்கடம் அல்அமீன் காலனியை சேர்ந்தவர் முகமது வாசிம். மாவு விற்கும் தொழில் செய்து வரும் இவருக்கும், கோவையை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியிடம் பழகி வந்த முகமது வாசிம், பெற்றோர்கள் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த சிறுமியின் தாயார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முகமது வாசிம்மை அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது வாசிம்மை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்த ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கோவை துடியலூர் காவல்நிலையத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் கோவையில் போக்சோ பிரிவின் கீழ் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.