நெல்லையில் நேற்று காணாமல் போனதாக தேடப்பட்ட இளைஞர் தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சாமுவேல் மகன் ராஜா சிங் (30). இவரை நேற்று மாலை முதல் காணவில்லை என உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் தென்காசி - நெல்லை செல்லும் ரயில் தண்டவாள வழித்தடத்தில் வாலிபர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அது காணமல் போனதாக தேடப்பட்டு வந்த ராஜாசிங் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை ராஜா சிங் செய்து கொண்டார ? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளம் அருகே வீசப்பட்டாரா ? என பல்வேறு கோணங்களில் முதற்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.