நாகை மாவட்டம் சீர்காழியில் கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில், மாடியிருந்து விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி கடைவீதியில் கூட்டுறவு மருந்தகம் இயங்கி வருகிறது. அங்கு, உடையம்பள்ளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். நேற்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் இன்று காலை மருந்தகத்தில் விசாரிக்க வந்தபோது, அருகிலிருந்த தோட்டத்தில் சுபாவின் உடல் கிடந்துள்ளது. மாடியிலிருந்து அவர் விழுந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கைநரம்பு அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.