தமிழ்நாடு

வாணியம்பாடி: ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என கண்டித்த பெற்றோர்- ஐ.டி ஊழியர் விபரீத முடிவு

Sinekadhara

வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தம குப்பம் காட்டுகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆன்லைன் ரம்மி ஆடும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனந்தன் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடியதில் பல லட்சம் ரூபாய் இழந்ததிருக்கிறார்.

இது தெரியவரவே பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்ததால் மனமுடைந்த ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். மேலும் இந்த தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.