தமிழ்நாடு

இன்ஸ்டாவில் காதல்! ரகசிய திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த இளம் ஜோடி!

இன்ஸ்டாவில் காதல்! ரகசிய திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த இளம் ஜோடி!

webteam

அரியலூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். தற்போது ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அதே அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீனா. தற்போது கல்லூரி பயின்று வரும் மாணவியாக உள்ளார்.

சரத்குமாரும் , ரவீனாவும் இன்ஸ்டாகிராமில் ஆறு மாதங்களுக்கு முன் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி பழக ஆரம்பித்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் துவங்கியுள்ளனர்.

6 மாதமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். வீட்டிற்குச் சென்றால் பெண்ணின் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்துள்ளனர்.