இந்திய ரயில்வேயில் மொத்தம் நாடு முழுக்க 32,428 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்திற்கு உட்பட்ட தென்ன ரயில்வேயில் மட்டும் 2,694 காலி பணியிடங்கள் உள்ளது.
கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், எஸ்.எஸ்.எல்.சி படித்து இருந்தால் போதுமானது.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 18 - 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18000 (அடிப்படை சம்பளம்)
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250