தமிழ்நாடு

யோகிபாபு, நிரோஷா நடித்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ..!

யோகிபாபு, நிரோஷா நடித்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ..!

webteam

கொரோனா விழிப்புணர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்ட வீடியோவில் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவத் தொடங்கியது. சீனாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இதனால் பல்வேறு நாட்டிற்கு செல்ல பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 76 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் மத்திய மாநில அரசுகள் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்ள என்னென்ன வழிமுறைகளை நாம் பின்பற்றவேண்டும் போன்றவை விளக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ராம்கி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.