தமிழ்நாடு

யோகா தமிழர்களின் கலை, அதை நிராகரிக்கக் கூடாது: சீமான்

யோகா தமிழர்களின் கலை, அதை நிராகரிக்கக் கூடாது: சீமான்

rajakannan

யோகாவை உலகிற்கு வழக்கியவர்கள் தமிழர்கள் என்றும் அதை நிராகரிக்கக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ’யோகா உடலுக்கும் மனதுக்குமான பயிற்சி. அதில் பக்தி, மதம் இருக்கிறது என்று பார்க்க வேண்டியதில்லை’ என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ’யோகா தமிழர்களின் கலை. அதை ஏன் நிராகரிக்க வேண்டும்? யோகா உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானது. அதற்கு மதச் சாயம் பூசக்கூடாது. யோகாவை உலகிற்கு வழக்கியவர்கள் தமிழர்கள் தான். அது கட்டாயமாக்கப்பட வேண்டும்’ என்றார்.