தமிழ்நாடு

பிரபல கவிஞர் ஹெச்.ஜி ரசூல் மரணம்

பிரபல கவிஞர் ஹெச்.ஜி ரசூல் மரணம்

webteam

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் ரசூல். எழுத்தாளரான இவர், கவிஞர், கட்டுரையாளர் என தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர். இஸ்லாம் மதத்தில் பெண்களின் நிலையை பற்றி அதிகம் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள அவரின் சிறுகதைகளும், கவிதைகளும் அழுத்தமான கருத்துகளை எடுத்துரைப்பவையாகும்.  

"ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபி" என்ற அவரது கவிதை பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன்மூலம், உள்ளுர் ஜமாத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் மிகவும் சிரமத்திற்கு ஆளானார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரசூல் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இறக்கும் தருவாயில் கூட ரசூல் தான் கொண்டிருந்த கொள்கையில் உடும்பு பிடியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.