தமிழ்நாடு

சத்துணவு முட்டையில் புழுக்கள்: அதிர்ச்சியில் மாணவர்கள்

சத்துணவு முட்டையில் புழுக்கள்: அதிர்ச்சியில் மாணவர்கள்

webteam

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசுப் பள்ளியில் சத்துணவுடன் மாணவர்களுக்கு வழங்கிய முட்டைகள் அழுகி, புழுக்கள் நெளிந்ததால் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

திருத்தணி ஆலமரம் தெருவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவின் போது வழங்க வேண்டிய முட்டைகளை ஒப்பந்ததாரர்கள் சனிக்கிழமை கொடுத்துள்ளனர். இன்று காலை பள்ளிக்கு வந்த சத்துணவு பணியாளர்கள் அட்டையில் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் எடுத்து வேக வைத்து உறித்து பார்த்தபோது முட்டை கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசியது.

அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அப்போது அட்டையில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் திறந்து பார்த்தபோது, முட்டைகள் அழுகியும் உடைந்த முட்டைகளிலிருந்து கொத்துக் கொத்தாக புழுக்களும் நெளிந்து கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.