தமிழ்நாடு

குடிநீர் தொட்டியில் புழுக்கள் உற்பத்தி: சுகாதாரமற்ற தண்ணீர் என மக்கள் புகார்

குடிநீர் தொட்டியில் புழுக்கள் உற்பத்தி: சுகாதாரமற்ற தண்ணீர் என மக்கள் புகார்

webteam

மதுரை மேலூரில் குடிநீர் தொட்டியில் புழுக்கள் உற்பத்தியாகியுள்ளதால் மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் மார்க்கெட் தெருவில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் குழாயின் வால்வு பகுதியில் வணிகர்கள் சிலர் இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை கொட்டி வருகின்றனர். அதனால், உற்பத்தியாகும் புழுக்கள் குடிநீர் தொட்டி, குழாய்களிலும் பரவியுள்ளன. அந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.