தமிழக சட்டப்பேரவையில் தமிழ் சங்கத்திற்கு இருக்கை அமைக்க வேண்டும் என உலக தமிழ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
உலகத் தமிழ் சங்கங்களின் மாநாடு வரும் மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. மே 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாடு, உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ளது. தமிழ் சங்கங்கள் அனைத்தும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், 5 முதல் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சட்டப்பேரவையில் தமிழ் சங்கத்திற்கு ஒரு இருக்கை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சங்கங்கள் முன்வைத்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள 375 தமிழ் சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டிற்கு, அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநாட்டில் அரசியல் பேசுவதை தவிர்த்து, தமிழ் வளர்ச்சி சார்ந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.