உலக தாய்ப்பால் வாரவிழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
உலக தாய்ப்பால் வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
அப்பேரணியில் தாய்ப்பாலின் அவசியம், தடுப்பூசி போடுதல், மார்பக புற்றுநோயை தடுத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை பேரணியில் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்றனர், இப்பேரணியில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்,மருத்துவர்கள்,செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.