8 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெட்ரோ அலுவலகத்தை பொருத்தவரை தற்காலிக ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என இரு தரப்பினர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிக ஊழியர்களை அதிக சம்பளத்திற்கு மெட்ரோ அதிகாரிகள் பணியமர்த்துவதாக அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டை முன் வைத்து வந்தனர். தற்போது அவர்களில் 8 பேரை மெட்ரோ நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது.
இதை கண்டித்து கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகத்திடம் கேட்டபோது, ஊழியர்கள் சங்கம் அமைத்ததால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிக அளவில் தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்வதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளதாக அரசு ஊழியர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடுவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.