தமிழ்நாடு

`வெட்கக்கேடு' டூ `பாலியல் தொல்லை' - நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் லிஸ்ட்!

நிவேதா ஜெகராஜா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளாக இருப்பவை: `வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைகள் தெரிவிக்க கூடாது என்பதற்கு, எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தினர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முழுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூட்டத் தொடர் சுமூகமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 18-ம் தேதி மழைக்கால கூட்டத்தினர் தொடங்க உள்ள நிலையில் ஜூலை 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அரசியல் கட்சி குழு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.