தமிழ்நாடு

'கெத்து', 'வச்சு செய்வேன்' சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் பாண்டியராஜன்

'கெத்து', 'வச்சு செய்வேன்' சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் பாண்டியராஜன்

Rasus

‘கெத்து’ , ‘வச்சு செய்வேன்’ என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது என அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள். ‘கெத்து’ , ‘வச்சு செய்வேன்’ என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது. இளைஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அதனை தற்போது பயன்படுத்துகிறார்கள். இன்றைய இணைய உலகில் 80 சதவீத தகவல் தொடர்புகள் செல்போன் மற்றும் இணையம் மூலமாக நடைபெறுகின்றன. இதில் 50% தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. தமிழ் மொழியில் தகவல் தொடர்பு 0.01% மட்டுமே நடைபெறுகிறது.

உலகில் படைக்கப்படும் அனைத்து படைப்புகளுக்கும் 1 மாதத்திற்குள் தமிழில் பெயர் வைக்கப்பட வேண்டும். உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீன மொழியை தவிர மற்ற 5 மொழிகள் பேசப்படுவது கிடையாது. இணைய தகவல் தொடர்பில் தமிழ் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். தமிழ் காப்பு போராட்டத்திற்கு அனைவரும் தயாராக வேண்டும் நாம் மறந்த தமிழ் வார்த்தைகளான "கண்ணான கண்ணே" " வசீகரா" " நீ வா" என எல்லாவற்றையும் பாடலாசிரியர் தாமரை தமது பாடல்களில் கொண்டு வருவது பாராட்டிற்குறியது” என தெரிவித்துள்ளார்.