தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - பெண்கள் ஆர்ப்பாட்டம் 

டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - பெண்கள் ஆர்ப்பாட்டம் 

webteam

பாம்பன் குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் 3 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேஸ்வரம் தீவில் இயங்கி வந்த 11 மதுக்கடைகளில் 8 மதுக்கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள 3 மதுக்கடைகள் மட்டும் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இயங்கி வருகின்றன. இந்த மூன்று மதுக்கடைகளிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மதுப் பிரியர்கள் குவிந்து வருவதால் குடி போதையால் சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் வாகன விபத்துக்களும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே 3 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மீனவ மகளிர் கூட்டமைப்பு, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த மதுக்கடைகளால் பகல் 12 மணிக்கு மேல் பாம்பனில் பெண்களால் நடமாட முடியவில்லை எனவும் உள்ளூர் பேருந்துகளில் கூட பயணிக்க முடியவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் 3 மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும் குந்துக்கால் மற்றும் அக்காள் மடம் பகுதிகளில் புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.