ஆணாக மாற விரும்பும் தன்னை, தன் குடும்பத்தினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.
மதுரை பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா. அவர் ஆணாக மாற விரும்புவதாக தொடர்ந்து 4 மாதம் தன் குடும்பத்தினரிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன் எண்ணத்திற்கு குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக லாவண்யா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அத்துடன் தான் ஆணாக மாறினால் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி மிரட்டல் விடுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தன்னை திருநங்கை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் சேர்த்துவிடுமாறும் லாவண்யா கோரிக்கை விடுத்துள்ளார்.