தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை முயற்சி?

கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை முயற்சி?

Rasus

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பராபுரம் அடுத்த கல்லடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி காந்திமதி. கூலி வேலை செய்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் கீழத்தேவநல்லூரை சேர்ந்த நயினார் பாண்டியன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால் வட்டியுடன் சேர்த்து 45 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும் என காந்திமதிக்கு நயினார் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காந்திமதி வீட்டிலிருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது தற்செயலாக வீட்டிற்கு வந்த அவரின் உறவினர் செல்வம், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)