தமிழ்நாடு

சொத்துக்காக பெண் கொலை - சகோதரி கைது

சொத்துக்காக பெண் கொலை - சகோதரி கைது

webteam

சென்னை சைதாப்பேட்டையில் சொத்துக்காக மாநகராட்சி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

சென்னை சைதாப்பேட்டை ஜோதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. சென்னை மாநகராட்சியில் வேலை பார்த்து வந்த இவர், கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சடலமாக ஜெயா கண்டெடுக்கப்பட்டார். உடல் நிலை சரியில்லாமல் ஜெயா இறந்து விட்டதாக, அவரது மூத்த சகோதரி தேவி தெரிவித்திருந்தார். 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தேவி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் சொத்துகளை அபகரிக்க ஜெயாவின் சகோதரி தேவியும், அவரது கணவர் எத்திராஜும் சேர்ந்து ஜெயாவை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. ஜெயாவை தலையணையால் அழுத்திக் கொன்றதாக கைதான தேவி மற்றும் எத்திராஜ் வாக்குமூலம் அளித்துள்ளனர்.