தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் வழங்கியவர் மரணம் - அதிமுக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் வழங்கியவர் மரணம் - அதிமுக தலைவர்கள் இரங்கல்

Sinekadhara

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் வழங்கிய அவரது சகோதரர் மகள் லீலாவதி உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு அதிமுகவினர் உள்ளிடோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 72 வயதான லீலாவதி சென்னை பெருங்குடியில் உள்ள அவரது மகளின் வீட்டில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. லீலாவதியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீலாவதியின் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் லீலாவதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.