தமிழ்நாடு

சொத்து பிரச்னை: 2 பிள்ளைகளுடன் காவல்நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

சொத்து பிரச்னை: 2 பிள்ளைகளுடன் காவல்நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

kaleelrahman

சொத்து பிரச்னை காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணால் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா (34). இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கணவர் பார்த்திபன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவருக்கு சேரவேண்டிய சொத்தை கணவர் வீட்டார் பிரித்துத் தராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தனக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து தரும்படி, வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த அந்த பெண் இன்று பேரணாம்பட்டு காவல் நிலையம் எதிரே தனது இரண்டு பிள்ளைகள் மீதும், தன்மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். மேலும், அப்பெண்ணிண் புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன், தற்கொலைக்கு முயன்ற அப்பெண்ணை எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.