தமிழ்நாடு

'நமாஸ் பண்ண வேண்டுமா?'.. பெண் பயணியின் செயலால் நெகிழ்ந்து போன ட்ரைவர் - வைரல் போட்டோ

Veeramani

மும்பையில் உபெர் ஓட்டுநரை பின் இருக்கையில் நமாஸ் செய்ய அனுமதிப்பதற்காக ஒரு பெண் பயணி முன் இருக்கையில் அமர்ந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரம்ஜான் பண்டிகையின் நோன்பு காலத்தில் உபேர் ஓட்டுநர் பின் இருக்கையில் அமர்ந்து தொழுகை நடத்துவதற்காக முன் இருக்கையில் அமர்ந்து மும்பை பெண் ஒருவர் போட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.



இது குறித்து பிரியா சிங் என்ற பெண் பகிர்ந்த பதிவில், "நான் விமான நிலையத்திலிருந்து உபெர் காரினை  எடுத்த 10 நிமிடங்களுக்குப் பிறகு ஓட்டுநரின் மொபைலில் அசான் ஒலிக்கத் தொடங்கியது.  நான் அவரிடம் 'நமாஸ் பண்ண வேண்டுமா?' என்று கேட்டேன், அதற்கு அவர் "என்னால் முடியுமா? என்று கேட்டார். அதன்பின்பு  காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு பின் இருக்கையில் அவர் பிரார்த்தனை செய்வதற்காக நான் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

இப்படிப்பட்ட இந்தியாவைப் பற்றிதான் என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். நாங்கள் நல்லிணக்கத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசினோம், மனிதகுலத்தின் அடிப்படைகளுக்கு ஊக்கம் தருவதற்காக இதை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் இடுகையிட எனது விருப்பத்தை அவரிடம் கூறினேன் " என தெரிவித்திருக்கிறார்.