சென்னை திருவேற்காடு காவல்நிலையத்தில், காவலர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவேற்காடு பகுதியில் உள்ள செந்தமிழ் நகரில் ரேணுகா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் உள்ள அமிர்தவள்ளி என்பவரின் குடும்பத்தினருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர் பிரச்னையின் காரணமாக திருவேற்காடு காவல்நிலையத்தில் ரேணுகா மீது அமிர்தவள்ளி புகார் அளித்தார். அதுகுறித்த விசாரணைக்காக நேற்று காவல்நிலையம் வந்த ரேணுகா, மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைக் கண்ட காவலர்கள் அவர் மீது பற்றிய தீயை போராடி அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த ரேணுகாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிந்தார்.
காவல்துறையினர் அமிர்தவள்ளி குடும்பத்துக்கு ஆதரவாக செயல்பட்டதுதான் ரேணுகா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என உற வினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.