100 பவுன் நகையை மனைவி திருடி மறைத்து வைத்து விட்டு, திருட்டு போனதாக நாடகமாடியதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி பெரிய செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட், துறைமுக ஊழியர். இவர் தனது மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வீட்டில் கடந்த 3-ம் தேதி சுமார் 100 பவுன் நகை கொள்ளை போனதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், வின்சென்ட்டின் மனைவிதான் 100பவுன் நகைகளை கொள்ளையடித்து நாடகமாடியது தெரியவந்து. போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் நகையை திருடி மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து வின்சென்ட்டின் மனைவி ஜான்சியை கைது செய்தனர். ஆனால் ஜான்சிராணி கைது செய்யப்பட்ட அன்றைய தினமே சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மனமுடைந்த வின்சென்ட் தூக்குமாட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.