கிருஷ்ணகிரியில் தன்னைக் கடித்த பாம்புடன் காவல் நிலையத்திற்கு வந்த நபரால் பெண் காவலர் அலறியடித்துள்ளனர். பாம்பு கடித்த நபரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே பெத்த தாளப்பள்ளி கிராமம் ஆனந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதாகும் மருதுபாண்டி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். தனது விட்டில் இருந்தபோது மருது பாண்டியை கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு வலது கையில் கடித்துள்ளது. மது போதையில் இருந்த மருதுபாண்டி தன்னை கடித்த காட்டு விரியன் பாம்புபை பிடித்து ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்துக்கொண்டு தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு இருந்த பெண் காவலரிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு பெண் காவலர் மருது பாண்டியிடம் அறிவுரை வழங்கினர். அப்போது தன்னைக் கடித்த பாம்பை பிடித்து வந்திருப்பதாகவும் பிடித்து வந்த பாம்பை காவலர்களிடம் காண்பிக்க முயன்றார். பிளாஸ்டிக் கவரில் பாம்பு உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பெண் காவலர் அலறியுள்ளார் உடனடியாக காவல் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
பிறகு அவ்வழியாக சென்ற ஆட்டோவில் ஏற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்ற மருதுபாண்டிக்கு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். இரண்டு பாட்டில் குளுக்கோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்த நிலையில், திடீரென மதுபோதையில் இருந்த மருது பாண்டி தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருது பாண்டியை கடித்த பாம்பு இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாம்புடன் காவல் நிலையத்துக்கு வந்த நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.