தமிழ்நாடு

‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட முடியாது’ - வேதாந்தா

‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட முடியாது’ - வேதாந்தா

rajakannan

மாசு ஏற்படுத்தியதற்கு ஆதாரம் எதுவும் இல்லாத போது ஆலையை மூட உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு மூடியுள்ள நிலையில், அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. இன்று வேதாந்தா நிறுவனம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

“ஸ்டெர்லைட்டில் வெளியேறும் கழிவு, வாயுக்கள் வரம்புக்குள் இருப்பதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதனை மறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 67 ஆலைகள் இருக்கும் போது ஸ்டெர்லைட் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? மாசு ஏற்படுத்தியிருந்தாலும் ஆலையை மூடுவது தீர்வாக அமையாது. துப்பாக்கிச் சூடு தவிர ஆலையை மூட வேறு காரணம் இல்லை” என வேதாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜூலை 4ம் தேதிக்கு அடுத்தக்கட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.