தமிழ்நாடு

சமமான கல்வி இல்லாத போது நீட் தேர்வில் அர்த்தமில்லை: நடிகை ரோகிணி

சமமான கல்வி இல்லாத போது நீட் தேர்வில் அர்த்தமில்லை: நடிகை ரோகிணி

rajakannan

எல்லோருக்கும் சமமான கல்வி கிடைத்தால்தான் நீட் தேர்வு வைப்பதில் அர்த்தம் உள்ளது என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற நடிகை ரோகிணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

நாங்கள் போராடினோம், அனிதா இறப்பதற்கு முன்பாக நீட் தேர்வு வேண்டாம் என்று பல இடங்களில் கூட்டம் போட்டு போராடினோம். ஆனால் அதற்கு எந்த விளைவும் கிடையாது. ஒரு மாதத்திற்கு முன்னாடி சொன்னார்கள் தமிழகத்திற்கு மட்டுமே விலக்கு என்று. ஆனால் ஒரு மாதத்திலேயே அதனை மாற்றி கிடையாது என்று சொல்லிட்டாங்க. 

ஒரே ஒரு விஷயம் தான். எல்லோருக்கும் சமமான கல்வி கிடைத்தால் நீட் வைப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த மாதிரி எந்த கல்வி திட்ட முறையும் நம்ம ஊர்ல இல்ல. அப்படிங்கிற போது நீட்டிற்கான அர்த்தமே இல்லை. அதனை விலக்க வேண்டுமென்றால் இந்த குழந்தையின் உயிர் பறிபோனதுக்கு அப்புறம்தான் செய்யணுமா? அப்பவாவது விலக்குவார்களாக என்று தெரியவில்லை. மாணவர்கள் போராட்டம் அங்காங்கே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அமைதியான முறையில் போராடி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் முன்னாடி போராடியதை தற்போது மாணவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.