தமிழ்நாடு

கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு

கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு

webteam

சென்னை அரும்பாக்கத்தில் இளைஞரை கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

அரும்பாக்கம் என்.எஸ்.கே நகரை சேர்ந்த அருண் என்பவர், செல்போனில் பேசியவாறு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், முகவரி கேட்பது போல் நடித்து, கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அருண் செல்ஃபோனை தர மறுக்கவே, அவரை கத்தியால் தலையில் தாக்கிவிட்டு செல்ஃபோனை பறித்துச் சென்றனர். தலையில் காயமடைந்த அருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரில் அமைந்தகரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல், சென்னை தேனாம்பேட்டையில் நட்சத்திர ஓட்டல் ஊழியர் சித்தரஞ்சனை தாக்கிவிட்டு செல்ஃபோனை பறித்து சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.