தமிழ்நாடு

புதிய புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா? எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்? - முழு விபரம்

webteam

தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வருகிற 23ம் தேதி புயலாக வலுவடைய உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட 'சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.  

உருவாகவிருக்கும் இந்த புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அசானி புயலுக்கு பிறகு இந்தியா ஒரு புயலை சந்திக்க போகிறது. இந்த புயல் வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது தமிழகத்துக்கு எந்தவித மழை பாதிப்பும், வெள்ள பாதிப்பு ஏற்படாது. ஆனால் புயல் கரையை நோக்கி நகரும் போது தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இது குறித்து முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம் -