தமிழ்நாடு

புதுச்சேரியில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்தாகுமா? தமிழிசை பதில்

புதுச்சேரியில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்தாகுமா? தமிழிசை பதில்

webteam

தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாக தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி புதுச்சேரியிலும் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புதுச்சேரியிலும் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பெற்றோர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றார்.