ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனை அருகே உள்ள அறிவுரைக்கழகத்தில் ஆஜரானபின் செய்தியாளர்கள் பேட்டியளித்த அவர், அடக்குமுறைகளால் போராட்டங்களை நிறுத்திவிட முடியாது என தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்ததாக மாணவி வளர்மதியை சேலம் போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ரகுபதி, மாசிலாமணி, ராமன் ஆகியோர் முன்பு மாணவி வளர்மதி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன் பிறகு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கோஷமிட்டபடி வளர்மதி வெளியே வந்தார். அப்போது புதியதலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், "விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வர விடமாட்டோம். நாங்கள் அதனை தொடர்ந்து எதிர்ப்போம். துண்டு பிரசுரம் விநியோகித்ததால் குண்டர் சட்டம் போட்டது. இந்த அரசின் அடக்குமுறையை காட்டுகிறது. ஆனால் எங்களுடைய போராட்டம் அடங்காது" என்று வளர்மதி கூறினார்