MK Stalin
MK Stalin File image
தமிழ்நாடு

எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பாரா?

webteam

பெங்களூர் நகரில் இந்த மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கர்கே தலைமையில் கர்நாடக தலைநகரில் இரண்டாவது எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக பாட்னாவில் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெறாத பல்வேறு கட்சிகளுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rahul Gandhi | Sonia Gandhi

அந்தவகையில் அகில இந்திய முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இருந்து விசிக, மதிமுக மற்றும் கொங்கு தேச மக்கள் கட்சிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், பெங்களூர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்

மேகதாது அணை பிரச்னை காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், திமுகவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர் நகரில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், ஜூலை 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.

இக்கூட்டம் பற்றிய விரிவான தகவல்களை, இச்செய்தியில் இணைக்கப்படும் வீடியோவில் காணலாம்.