தமிழ்நாடு

ரேசன் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்

ரேசன் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்

webteam

வால்பாறையில் காட்டு யானைகள் நியாயவிலை கடையை உடைத்து, அரிசி, பருப்பு போன்றவற்றை மிதித்து சேதப்படுத்தி உள்ளன. 

கெஜமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் 6 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன. இந்த யானைகள் பகல் நேரங்களில் வெளியில் வந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் வால்பாறையில் உள்ள நியாவிலை கடைக்கு சென்ற 6 காட்டு யானைகள் ரேசன் கடை ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும் அங்கிருந்த அரிசி, பருப்பு போன்றவற்றை மிதித்து சேதமாக்கி உள்ளன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அருகில் இருந்த வனப் பகுதிக்குள் விரட்டினர். மேலும் இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.