கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 40 யானைகள், பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காவேரி வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வருகின்றன. அறுவடையை குறி வைத்து வரும் யானைகள் 4 மாதங்கள் முகாமிட்டு விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து நேற்று 40 யானைகள், சானமாவு வனப்பகுதியில் உள்ள போடூர்பள்ளம் காட்டிற்கு வந்தன.இப்பகுதியில் பயிரிட்டிருந்த 5 ஏக்கர் ராகி பயிர்களை நாசம் செய்வதாக கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டினார்கள்.தற்போது சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள இந்த 40 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.