தமிழ்நாடு

வனத்துறை வாகனத்தை துரத்திய காட்டு யானை: அச்சத்துடன் செல்போனில் பதிவு செய்த ஊழியர்

வனத்துறை வாகனத்தை துரத்திய காட்டு யானை: அச்சத்துடன் செல்போனில் பதிவு செய்த ஊழியர்

webteam

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறை வாகனத்தை காட்டு யானை துரத்தி வரும் காட்சி பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆனைக்கட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினர் சென்ற வாகனத்தை காட்டு யானைக் கூட்டம் வழிமறித்தது. இதனால் அச்சமடைந்த அவர்கள் வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி விட்டு யானை கூட்டம் கலைந்து செல்வதற்காக காத்திருந்தனர். 

அப்போது அந்த கூட்டத்தில் மிகவும் கோபத்துடன் காணப்பட்ட ஆண் யானை ஒன்று திடீரென்று வாகனத்தை தாக்க வந்தது. செய்வதறியாமல் திகைத்த வனத்துறையினர், வேகவேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். இந்த அச்சம் மூட்டும் காட்சிகளை வாகனத்தில் பயணம் செய்த ஊழியர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.